×

திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என எளிய மொழியில் கூறிய ஓட்டுநரின் வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

சென்னை : நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என எளிய மொழியில் கூறிய ஓட்டுநரின் வீடியோவை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஓட்டுநர், மகளிர் உரிமை தொகை, மகளிர் விடியல் பயணம், நான் முதல்வன், தமிழ் புதல்வன், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திமுக அரசின் சாதனை திட்டங்களை பட்டியலிட்டு பேசியுள்ளார்.

மேலும் தான் படிக்கும் காலத்தில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இல்லையே என வருத்தம் ஏற்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர்,”நான் திமுகவுக்கு வாக்களித்ததில்லை, ஆனால், இம்முறை திமுகவுக்குத்தான் வாக்களிப்பேன். எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் சாதனைகள் என எதுவுமில்லை. மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் போன்ற திட்டங்கள், பெண்களின் சுயமரியாதையை உயர்த்துவதாக உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டங்களை அடுத்த 100 ஆண்டுகளுக்கு யாராலும் மாற்றிவிட முடியாது. “நான் கொண்டு வந்த திட்டங்களை யாராவது ரத்து செய்ய நினைத்தால் போராட்டங்கள் வெடிக்கும்” என பேரறிஞர் அண்ணா கூறினார். நமது முதலமைச்சரின் திட்டங்களை ரத்து செய்ய நினைத்தால், அண்ணா கூறியதைப் போல போராட்டங்கள் வெடிக்கும்.சிறந்த பொருளாதார நிபுணரைப் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார். ஒன்றிய அரசின் தடைகளை மீறி தமிழ்நாடு முன்னேற்றி உள்ளது – தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது,”இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று! நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!”என தெரிவித்துள்ளார்.

Tags : Chief Minister ,Dimuka ,K. Stalin ,Chennai ,Orani ,Tamil Nadu ,Mu. K. Stalin ,
× RELATED திமுக கூட்டணியில் CPIக்கு 5 தொகுதிகள்...