திருப்பூர்: டி.கே.டி. மில் பகுதியில் குடும்ப தகராறில் மனைவியை அரிவாள் கொண்டு வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்டார். செந்தில் குமார் (43) – சத்யா (41) இருவரின் சடலங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்; இருவருக்கும் 15 வயதில் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
