×

மொபைல்ஆப் மூலம் வழங்கிய கடனுக்கு அதிக வட்டிகேட்டு மிரட்டிய 2 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

திருவையாறு. பிப்.12: திருவையாறு அடுத்த ராயம்பேட்டை மெயின்ரோட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் விவேக்(29). இவர் மொபைல் ஆப் மூலம் பெங்களூர் பென்னாகள்ளி, கே.ஆர்.புரத்தில் உள்ள கிரிட் பீ என்ற நிறுவனத்தில் ரூ.15,000 கடன் பெற்றுள்ளார். அதற்கு வட்டியாக அதிக தொகை கேட்டு மிரட்டுவதாகவும், விவேக் செல்போனில் உள்ள பெண்களின் செல் நம்பர்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்வதாகவும், மொபைல் ஆப் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவையாறு காவல்நிலையத்தில் கடந்த 10.1.2021 அன்று விவேக் புகார் செய்தார். புகாரின்பேரில் திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் விவேக் மைசூரில் உள்ள இ-ரூபி பைன்டெக் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் ரூ.3,000ம் டெல்லியில் உள்ள கேஸ்-பீன் மொபைல் ஆப் பிரேவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.9,500ம் கடன் பெற்றுள்ளார். அவர்களும் விவேக்கை மிரட்டுவதாகவும் கொடுத்த புகாரின் பேரில் அந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : companies ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...