×

உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்

பெரம்பூர், மார்ச் 18: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி ஜிஎன்டி சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி யோகேஷ் மற்றும் எஸ்ஐ பிரேம்நாத் மற்றும் போலீசார் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை 4 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர பதிவெண் கொண்ட கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது ரூ.4.92 லட்சம் ரொக்கம் சிக்கியது. இதுதொடர்பாக விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சூலூர் பேட்டை நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த மதுமோகன் சில்லா(40) என்பதும், உரிய ஆவணமின்றி பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.4.92 லட்சத்தை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags : PERAMPUR ,ERUKANHERI GNT ROAD ,
× RELATED சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்...