பரமத்திவேலூர், மார்ச் 18: பரமத்தி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பரமத்திவேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா வரவேற்றார். தாசில்தார் ராஜா தலைமை வகித்தார். பரமத்தி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் தனராசு, ஒன்றிய பொறுப்பாளர்கள் லலித்குமார், சாமிநாதன், தளபதி சுப்பிரமணியம், வக்கீல் சரவணகுமார், மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் ரமேஷ்பாபு, பேரூர் செயலாளர் முருகன், வெங்கரை பேரூர் செயலாளர் தீபன் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு, 100 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் அருண், துணை அமைப்பாளர் ஜெகதீசன், ஓட்டுநர் அணி காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
