×

ஆங்கிலத்தில் உச்சரிப்பு பயிற்சி

குமாரபாளையம், பிப்.12: தளிர்விடும் பாரதம் சேவை அமைப்பும், வெஸ்ட்வெலி இங்கிலீஸ் போனடிக்ஸ் அகாடமியும் இணைந்து நடத்திய பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செல்வமணி தலைமை தாங்கினார். தளிர்விடும் பாரதம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். அகாடமியின் இயக்குனர் சண்முகம் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஆசிரியைகள் புவனேஷ்வரி, கீதா, தளிர்விடும் பாரதம் அமைப்பின் உறுப்பினர்கள் கணபதி, அருண்குமார், பிரபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி