×

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கொடூரத் தாக்குதல்: கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கொடூரத் தாக்குதல் குறித்து கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனை தெரிவித்துள்ளார். காபூலில் உள்ள ஒரு மருத்துவமனையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 250 பேர் காயமடைந்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வான்வழித் தாக்குதலில் மருத்துவமனையின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; இந்தக் கொடூரமான செயலை முழுமையாக விசாரித்து, இதற்கு காரணமானவர்களைப் பொறுப்பேற்கச் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை கேட்டுக்கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனது ஆப்கானிய மக்களுடன் நான் துணையாக நிற்கிறேன். நாம் இந்த காயங்களிலிருந்து குணமடைந்து, ஒரு தேசமாக மீண்டும் எழுவோம். இன்ஷா அல்லாஹ்

காபுலில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பொதுமக்களின் வீடுகள், கல்வி நிலையங்கள், மருத்துவக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டோ அல்லது தவறுதலாகவோ இலக்கு வைப்பது ஒரு போர்க்குற்றமாகும். குறிப்பாக புனிதமான ரமலான் மாதத்தில், மனித உயிர்கள் மீது காட்டப்படும் இந்த அலட்சியம் அருவருப்பானது மற்றும் ஆழ்ந்த கவலைக்குரியது. இது பிரிவினையையும் வெறுப்பையும் மட்டுமே வளர்க்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Pakistan ,Afghanistan ,Rashid Khan ,Kabul ,Taliban ,
× RELATED காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான்...