×

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை

சிவகங்கை, பிப்.12: சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000 வழங்க அரசு உத்தரவிட்டு அதற்குரிய சிறப்பு முகாம் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் 18 வயதிற்கு கீழ் உள்ள 34 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அவர்களுக்கான மருத்துவச்சான்று வழங்கும் வகையில் எலும்புமுறிவு மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர் கொண்ட குழு கண்காணித்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை சான்று வழங்கப்பட்டு அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் விடுபட்டிருந்தால் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து பதிவு செய்து மாதாந்திர உதவித் தொகை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பொன்னமராவதி அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்