×

சின்னசாமி ஸ்டேடியத்தில் மீண்டும் போட்டிகள்

 

பெங்களூரு: கடந்தாண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து நடந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். அதையடுத்து, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு மீண்டும் போட்டிகளை நடத்த விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டன. அதையடுத்து, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த கர்நாடகா கிரிக்கெட் சங்கத்துக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் அம்மாநில அரசு நேற்று முறைப்படி அனுமதி அளித்தது.

Tags : Chinnaswamy Stadium ,Bengaluru ,Royal Challengers Bangalore ,IPL ,
× RELATED 2026 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமனம்!