×

சுரண்டை அருகே கருவந்தாவில் அடிப்படை வசதி கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சுரண்டை, மார்ச் 17: சுரண்டை அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் அடிப்படை வசதி கேட்டு பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவந்தா ஊராட்சியில் சிமெண்ட் சாலை, தண்ணீர் வசதி, பஸ் வசதி மற்றும் சுகாதார வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதையும் ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் செய்து தரவில்லை என கூறி கருவந்தா ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பனை பாதுகாப்பு அணி மாநில தலைவர் வைரக்கண் தலைமை வகித்தார். ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக செய்து தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.

Tags : Karuvantha ,Surandai ,Karuvantha panchayat ,Alankulam ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...