×

எந்தக் கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை: தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டம்

 

சென்னை: எந்தக் கட்சியுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனத் தமிழக வெற்றிக் கழகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீபகாலமாக அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக, அஇஅதிமுக அல்லாது சசிகலா, ராமதாஸைத் தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu Victory Club Scheme ,Chennai ,Tamil Nadu Victory Club ,Deputy General Secretary ,C. D. R. Nirmal Kumar ,
× RELATED அசாமில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கவுரவ் கோகாய் உறுதி