×

மருதூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்!

 

குளித்தலை: தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினர் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளில் பகுதிகளில் வாகன சோதனை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருச்சி கரூர் மாவட்ட எல்லையான மருதூர் சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக முசிறியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சாரதா வயது 55 என்பவர் வந்த காரினை சோதனையிட்டபோது அவரது கை பையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூபாய் ஒரு லட்சம் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது.

இதனை அடுத்து பணத்தினை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் தேர்தல் நடத்தும் அலுவலரும் சார் ஆட்சியருமான சுவாதி ஸ்ரீ இடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் சார்நிலை கருவூலத்தில் செலுத்தப்பட்டது. கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் புறவழிச்சாலை மருதூர் சுங்கச்சாவடியில் தேர்தல் கண்காணிப்பு குழு பறக்கும் படை சோதனையில் ரூ.1 லட்சம் கைப்பற்றி குளித்தலை சட்டமன்றத் தேர்தல் அலுவலர் சார் ஆட்சியர் மாந சுவாதி ஸ்ரீ இடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Marathur Customs ,Baattalai ,Election Standard Monitoring Committee ,Baattalai Assembly Constituencies ,Tamil Nadu ,
× RELATED சிறுவலூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.53,200 பறிமுதல்!