×

வெள்ளகோவிலில் 10 டன் முருங்கை வரத்து

வெள்ளகோவில், மார்ச் 16: வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் முருங்கைகாய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறருது. இதற்கு, வெள்ளகோவில், புதுப்பை, முத்தூர், காங்கயம், மயில்ரங்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வயல்களில் சாகுபடி செய்த முருங்கை காயை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் நேற்று 10 டன் வரத்தான நிலையில் செடி முருங்கை ரூ.10, மரமுருங்கை கிலோ ரூ.12க்கும், கரும்பு முருங்கை ரூ.20க்கு விற்பனையானது. முருங்கை சீசனால் வரத்து அதிகரித்து விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

 

 

Tags : Vellakovil ,Puduppai ,Muthur ,Kangayam ,Mayilrangam ,
× RELATED போக்சோ வழக்கில் கூலித்தொழிலாளி கைது