- ஓதப்பாலம்-திருவனந்தபுரம்
- கேரள விரைவு பேருந்து சேவை
- பாலக்காடு
- சட்டமன்ற உறுப்பினர்
- பிரேம்குமார்
- கேரள மாநில அரசு விரைவு பேருந்து சேவை
- ஓதபாலம்-
- திருவனந்தபுரம்
- பாலக்காடு மாவட்டம்
- ஓதப்பாலம் நகராட்சி பேருந்து நிலையம்
- மாநகராட்சித் தலைவர்
- ஜெயசுதா
- துணை தலைவர்
- ராஜேஷ்
பாலக்காடு, மார்ச் 16: பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம்-திருவனந்தபுரத்துக்கு கேரள மாநில அரசு விரைவுப் பேருந்து சேவையை எம்எல்ஏ பிரேம்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒத்தப்பாலம் நகராட்சி பஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ஜெயசுதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜேஷ், நிரந்தரக்குழு தலைவர் ஷபிதா, கேஎஸ்ஆர்டிசி உபதேசக்குழு உறுப்பினர் சுனில் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பேருந்து எல்லா நாட்களிலும் ஒத்தப்பாலம் பஸ் நிலையத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருவில்லியாமலை, பழயனூர், சேலக்கரா, வடக்காஞ்சேரி, திருச்சூர், வைற்றிலா, கோட்டயம், கொட்டாரக்கரா வழியாக திருவனந்தபுரத்திற்கு மறுநாள் காலை 6.50க்கு சென்றடையும். திருவனந்தபுரத்திலிருந்து இரவு 10.15க்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு ஒத்தப்பாலம் பஸ் நிலையம் வந்தடையும்.
