கோத்தகிரி,மார்ச் 14: கோத்தகிரியில் முதல்முறையாக சூரிய காந்தி மலர்கள் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், கார்னேஷன், லில்லியம், கிரிசாந்தம், ஜெர்பரா போன்ற கொய் மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகவும், 3 ஆயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கோத்தகிரி கட்டப்பட்டு அருகே உள்ள கூக்கல் கிராம பகுதியில் முதல்முறையாக சூரியகாந்தி மலர்கள் சாகுபடி தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு மலர் 5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பெங்களூரு, சென்னை உட்பட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, அலங்கார வகைகளுக்காக விற்பனை செய்யப்படுகிறது. கக்குச்சி கொய்மலர் சாகுபடியாளர் சிவக்குமார் கூறுகையில், ‘‘தைவான் நாட்டிலிருந்து முதல் முறையாக கொண்டுவரப்பட்ட விதைகள், அரை ஏக்கரில் சாகுபடி செய்ததில் தற்போது மலர்ந்துள்ளன.
