×

திருவாரூர் கூட்டுறவு விற்பனை இணைத்தில் 23.950 டன் தேங்காய் ஏலம்

திருவாரூர்,மார்ச் 16: தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம், திருவாரூர் தலைமை அலுவலக வளாகத்தில் முழு தேங்காய் ஏலம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 22 விவசாயிகள் 65,000க்கும் மேற்பட்ட மட்டை உரித்த முழு தேங்காய்களை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு விவசாயிகள் கொண்டு வந்த தேங்காய்களை ஏலத்தில் எடுத்து கொண்டனர்.

விற்பனை செய்யப்பட்ட மொத்த எடை 23.950டன். அதிகபட்ச விலை ரூ.54. குறைந்தபட்ச விலை ரூ.40. சராசரி விலை ரூ.43.50க்கு ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தேங்காய்க்கு உரிய விலையும், வியாபாரிகளுக்கு நல்ல தேங்காய் கிடைக்கப்பெற்று பயனடைந்து சென்றனர்.

 

Tags : Tiruvarur Cooperative Marketing Association ,Tiruvarur ,Thanjavur Cooperative Marketing Association ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்