×

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நிறுத்தி வைப்பு: அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

அரியலூர், மார்ச் 16:அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு: 2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தைவிதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிரதி வாரந்தோறும் திங்கள்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு அவசரமான கோரிக்கை ஏதுமிருப்பின் அது குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்புறவாசலில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை இட்டுச்செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : Grievance Redressal ,Ariyalur District ,Ariyalur ,District Election Officer ,District Collector ,Rathinasamy ,2026 Tamil Nadu ,Legislative Assembly ,General Elections ,Election Commission of India ,Ariyalur District Collector ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...