×

சிலிண்டர் உயர்வுக்கு காரணமான ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்: சென்னையில் 45 இடங்களில் நடந்தது

பெரம்பூர்: சிலிண்டர் தட்டுப்பாடுகளை முறையாக கையாளாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் 45 இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான சேகர்பாபு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, ஒன்றிய அரசின் தவறான வெளியுறவு கொள்கையை கண்டித்தும், சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில், பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

சென்னை எழும்பூர் தொகுதி புதுப்பேட்டை எல்.ஜி.சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளருமான வழக்கறிஞர் இ.பரந்தாமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் தொகுதி ஜானி ஜான் கான் சாலையில் மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பகுதி செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகில் திமுக மாவட்ட செயலாளர் மயிலை த.வேலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தியாகராய நகர் முத்துரங்கன் சாலையில் தி.நகர் எம்எல்ஏ ஜெ.கருணாநிதி எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கோ.சு.மணி, திமுக மாற்றுத்திறனாளிகள் அணி மாநில தலைவர் ரெ.தங்கம், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் லயன் பா.சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பு பகுதியில் திமுக சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன், மண்டல குழு தலைவர் சரிதா, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன், மகேஷ் குமார், சந்துரு. இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தனசேகர் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திருவிக.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பாரதி சாலையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மேயர் பிரியா தலைமை வகித்தார். திருவிக.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதி செயலாளர்கள் தமிழ்வேந்தன், சாமிக்கண்ணு, தொகுதி பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனியாண்டவர் கோயில் தெருவில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட பொறுப்பாளருமான ஆர்.டி.சேகர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ். கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுபோல் ராயபுரம் சட்டமன்ற தொகுதி தங்க சாலை பேருந்து நிலையம் அருகே ராயபுரம் மேற்கு பகுதி சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராயபுரம் கல்மண்டபம் காவல்நிலையம் அருகே ராயபுரம் கிழக்கு பகுதி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி தலைமை வகித்தார். இதில், பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், செந்தில்குமார் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதுபோல் ஆர்கேநகர் சட்டமன்ற தொகுதி வண்ணாரப்பேட்டை தபால்நிலையம் அருகே ஆர்கேநகர் கிழக்கு பகுதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்கேநகர் மேற்கு பகுதி திமுக சார்பில், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, எம்எல்ஏ எபினேசர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, ஒன்றிய அரசை கண்டித்தும், காஸ் கட்டுப்பாட்டு கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் கூட்டணி கட்சியினர், திமுகவினர் கலந்துகொண்டனர்.

மாதவரம்: மாதவரம் தெற்கு பகுதி திமுக சார்பில், ஒன்றிய அரசை கண்டித்தும் இதற்கு துணை போகும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மாதவரம் பஜார் தெருவில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் பகுதி செயலாளர் துக்காராமன், மண்டல குழு தலைவர் நந்தகோபால், மாவட்ட அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார் உள்பட திமுக தொண்டர்கள், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இவர்கள் காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

திருவொற்றியூர் கிழக்கு பகுதி தேரடி தபால் நிலையம் அருகில் கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமையில் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக், சமக தலைவர் எர்ணாவூர் நாராயணன், திமுக நிர்வாகிகள் அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன், மேற்கு பகுதி செயலாளர்கள் வை.ம.அருள்தாசன், ஏ.விஆறுமுகம், கவுன்சிலர் கவிகணேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காலி சிலிண்டருக்கு மாலை அணிவித்தும் பதாகைகளையும் கையில் ஏந்திய வண்ணம் இருந்தனர்.

மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன் தலைமையில் வார்டு செயலாளர் தாமரை செல்வன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் ஆகியோர் விறகு அடுப்புடன் கும்மி அடித்து ஒன்றிய அரசை கண்டித்தும் பாட்டு பாடியும் சிலிண்டர் தட்டுப்பாடுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலந்தூர் வடக்கு, தெற்கு பகுதி மற்றும் கண்டோன்மெண்ட் நகர திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில், பழவந்தாங்கல சுரங்கப்பாதை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆலந்தார் தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன் தலைமை வசித்தார். வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் சுதா பிரசாத், அய்யம்பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ பீமாராவ், தேமுதிக பகுதி செயலாளர்கள் நாராயணன், தர்மா, மதிமுக பகுதி செயலாளர் கத்திப்பாரா சின்னவன், எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் முகம்மது பிலால் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு கண்டித்தும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கோல்டு பிரகாஷ், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டம், ஜெயக்குமார், திமுக நிர்வாகிகள் நடராஜன், சாலமோன், ஏசுதாஸ், உலகநாதன், கேபிள் ராஜா, மீன் மோகன், காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ், மோகனசுந்தரம், ஆதம் பிரகாஷ் கலந்துகொண்டனர். சென்னையில் 45 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Dimuka ,Union BJP government ,Chennai ,Perampur ,Chennai Collector's Office ,Department of Hindu Religious ,
× RELATED தனியார் வாகனங்களுக்கான வருடாந்திர FASTag...