×

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சிறப்பு குழந்தைகளுக்கு சுற்றுலா

பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டு பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கு என தனியாக விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வார்டு உறுப்பினர் டில்லிபாபுவுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் அவரது மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.60 லட்சத்தில் சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த 4ம் தேதி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் மதுமதி மற்றும் மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். அப்பொழுது அவர்கள் தங்களை ஒருநாள் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று நேற்று வடசென்னையை சேர்ந்த சுமார் 100 சிறப்பு குழந்தைகள் எம்கேபி நகர் பகுதியில் இருந்து 3 பேருந்துகளில் திருமுல்லைவாயல் பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்காக தயார் செய்யப்பட்டு வரும் முல்லைவனம் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்து சிறப்பு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர். அங்கு அவர்கள் மகிழ்ச்சியாக ஆடிப்பாடி விளையாடினர். அதனைத் தொடர்ந்து கடற்கரைக்குச் சென்று மகிழ்ந்து நேற்று மாலை வீடு திரும்பினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags : Department of Disabled Welfare ,Perambur ,Dillibabu ,MLA ,
× RELATED மண் தரையில் மழையிலும், வெயிலிலும்...