×

சிவில் குற்றங்களுக்கு அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் முடக்க அதிகாரம் இல்லை: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: விருதுநகர், வத்திராயிருப்பை சேர்ந்த ஸ்ரீனிவாசன், எஸ்ஐஆக பணியாற்றி ஓய்வு பெற்றார். காசோலை மோசடி வழக்கில் கீழமை நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்தது. இதனால், கருவூலத்துறை அவரது ஓய்வூதியத்தை நிறுத்தியது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி ஓய்வூதிய நிறுத்தத்தை ரத்து செய்தார். இதை எதிர்த்து கருவூல துறை மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளைநீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் ஆகியோர், ‘‘காசோலை மோசடி சிவில் தவறு. இதற்காக அரசு ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தவோ, முடக்கவோ அதிகாரம் இல்லை. கடுமையான குற்றங்கள், ஒழுக்கக்கேடான செயல்களுக்கே ஓய்வூதியத்தை நிறுத்த விதி அனுமதி அளிக்கிறது’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Madurai ,Srinivasan ,Vathirairup, Virudhunagar ,Treasury Department ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில் திருப்பம்;...