- Senthamangalam
- எம்எல்ஏ ராமலிங்கம்
- புதுச்சத்திரம் ஒன்றியம்
- நாட்டமங்கலம்
- கல்யாணி
- அக்சமுத்திரம்
- பச்சல்
- கண்ணூர்பட்டி
- கதிரநல்லூர்
- திருமலைப்பட்டி பஞ்சாயத்துகள்
சேந்தமங்கலம், மார்ச் 14: புதுச்சத்திரம் ஒன்றியத்தில், ரூ.2 கோடியில் சாலை பணிகளை ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். புதுச்சத்திரம் ஒன்றியம், நாட்டாமங்கலம், கல்யாணி, ஏ.கே.சமுத்திரம், பாச்சல், கண்ணூர்பட்டி, கதிராநல்லூர், திருமலைபட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.2 கோடியில் தார் சாலை, சிமெண்ட் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. வட்டார அட்மா குழு தலைவர் கவுதம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா முன்னிலை வகித்தார். விழாவில், ராமலிங்கம் எம்எல்ஏ கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து அப்பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர் ராஜசேகர், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தரணிபாபு, திமுக நிர்வாகிகள் விக்னேஸ்வரன், குமார், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
