- சேலம்
- அய்யந்தூரை
- சேலம் அட்டையம்பட்டி
- வடக்கு
- கம்பட்டாய்
- கோணங்கிபாளையம்
- பவர்லூம்
- கண்டர்குல மணிக்கம் பஸ் ஸ்டாப்
- முருகன்
- ஜெகடிஸ்
- கருகலம்பாளையம்
சேலம், மார்ச் 14: சேலம் ஆட்டையாம்பட்டி வடக்கு காட்டுக்கொட்டாய் கோணங்கிப்பாளையத்தை சேர்ந்தவர் அய்யந்துரை(34). இவர் கண்டர்குல மாணிக்கம் பஸ் ஸ்டாப்பில் பவர்லூம் தறி மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கடை வைத்துள்ளார். இவரது தம்பி முருகன். இவர் குறுக்கலாம்பாளையத்தை சேர்ந்த ஜெகதீஸ்(30) என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். இதில் ரூ.7 ஆயிரம் கொடுக்க வேண்டியது இருந்தது. இந்த பணத்தை அண்ணன் அய்யந்துரையிடம் கேட்டு ஜெகதீஸ் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கண்டர்குல மாணிக்கம் பெட்ேரால் பங்க் அருகில் அய்யந்துரையை ஜெகதீஷ், அவரது நண்பர்கள் கோவிந்தராஜ், தினேஷ் ஆகியோர் மடக்கி பணத்தை கேட்டு தாக்கினர். பின்னர் தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த அய்யந்துரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் கொடுத்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீசார், ஜெகதீஷ், தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.
