×

சமூகப் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? மக்களவையில் எம்பி சி.என்.அண்ணாதுரை கேள்வி தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்களின்

திருவண்ணாமலை, மார்ச் 14: கட்டுமானத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று மக்களவையில் எம்பி சி.என். அண்ணாதுரை கேள்வி எழுப்பியுள்ளார். மக்களவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை தெரிவித்திருப்பதாவது: கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் மற்றும் தொடர்புடைய பிற மத்திய நிதியுதவி திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட வசதிகள் மற்றும் சமூகப் பாதுகாப்பு சலுகைகள் கிடைப்பதை ஒன்றிய அரசு மதிப்பாய்வு செய்துள்ளதா? என தெரிவிக்க வேண்டும். மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் அவர்களில் சுகாதாரக் காப்பீடு, விபத்து காப்பீடு, ஓய்வூதியம், மகப்பேறு ஆதரவு போன்ற சலுகைகளைப் பெறும் தொழிலாளர்கள் எண்ணிக்கை மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் ஆண்டு வாரியாக கல்வி உதவி பெற்றவர்களின் விபரத்தை வெளியிட வேண்டும்.

மேலும், பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் கட்டுமானத் தொழிலாளர்களை குறிப்பாக புலம்பெயர்ந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்களைப் பாதித்துள்ளதா? என்பதை விளக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும், தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாக வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பதிவு செய்துள்ள இயக்கங்களை வலுப்படுத்தவும், சலுகைகள் வழங்குவதை மேம்படுத்தவும், பாதுகாப்பான பணி நிலைமைகளை உறுதி செய்யவும், வீட்டுவசதி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று விளக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : EU government ,M.B.C. ,Lalakawale ,N. Annadurai ,Tamil Nadu ,Tiruvannamalai ,MLAKAWAYAK ,C. N. Anna ,Thiruvannamalai ,Lalakawaya ,N. Anadurai ,
× RELATED கலைஞர் கனவு இல்லம் கட்ட 40 பேருக்கு பணி...