×

கலைஞர் கனவு இல்லம் கட்ட 40 பேருக்கு பணி ஆணை எம்எல்ஏ வழங்கினார் பெரணமல்லூர் ஒன்றியத்தில்

பெரணமல்லூர், மார்ச் 14: பெரணமல்லூர் ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் கட்டுவதற்காக 40பேருக்கு பணி ஆணை வந்தவாசி எம்எல்ஏ வழங்கினார். தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.3.50 லட்சம் மதிப்பில் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு நடப்பாண்டிற்கான நிதி ஒதுக்கினார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரணமல்லூர் ஒன்றியத்தில் சுமார் 203 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நேற்று பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பணி அணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிடிஓ பரமேஸ்வரன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, மனோகரன், மாவட்ட இலக்கிய அணி ஏழுமலை, பேரூராட்சி தலைவர் வேணிஏழுமலை முன்னிலை வகித்தனர். பிடிஓ இந்திராணி வரவேற்றார். இதில் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் கலந்துகொண்டு 40 பேருக்கு பணி ஆணைகளை வழங்கி பேசுகையில், ‘தமிழகத்தில் குடிசை வீடு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு முதல்வர் உறுதி கொண்டு உள்ளார். அதன்படி, குடிசை வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை நீங்கள் பயன்படுத்தி மென்மேலும் வளர வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிட துணை அமைப்பாளர் இளங்கோவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கலாம் பாட்ஷா, இளைஞர் அணி அமைப்பாளர் அன்பரசன், பொருளாளர் சசிகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மகேஷ், முருகன், துணை அமைப்பாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags : MLA ,Kalaignar ,Dream House ,Peranamallur ,Vandavasi ,Kalaignar Dream ,House ,Kalaignar Dream House ,Tamil Nadu ,
× RELATED ரூ.90 கோடியில் உயர்மட்ட பாலம், 4...