×

அனைத்து தொழிற்சாலைகளிலும் பெண்கள் புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அவசியம்

 

திண்டுக்கல், மார்ச் 14: திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அமைக்கப்பட வேண்டும என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பணியிடத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பெண்களை பாதுகாக்கவும், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் அனைத்து பணியிடங்களிலும், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான புகார்களை விசாரிக்க உள்ளக புகார் குழு அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Tags : Internal Complaints Committee ,Dindigul ,Dindigul district ,Joint Director ,Industrial ,Safety and Health… ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்