×

சுரண்டை நகராட்சியில் ரூ.1 கோடியில் கட்டப்பட்ட அங்கன்வாடி, சமுதாய நலக்கூடம் திறப்பு

சுரண்டை, மார்ச் 14: சுரண்டை நகராட்சி 2வது வார்டில் ரூ.17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், 25வது வார்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுகாதார வளாகம், 3வது வார்டில் ஆறாவது மாநில நிதி குழு மானியத்தில் ரூ.59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி கமிஷனர் அசோக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கராதேவி முருகேசன், பொறியாளர் முகைதீன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனி நாடார் எம்எல்ஏ, சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வள்ளியம்மாள் ஆறுமுகசாமி, அமுதா சந்திரன், வேல் முத்து, வினோத், சாந்தி பட்டு முத்து தேவேந்திரன், ஆறுமுகசாமி பாண்டியன், சபர்நிஷா, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anganwadi ,welfare ,Surandai Municipality ,Surandai ,Swachh Bharat Mission ,
× RELATED சென்னை மாவட்டத்தில் உள்ள...