×

தீர்த்தமலையில் ஆன்மிக சொற்பொழிவு

அரூர், மார்ச் 14: அரூர் அருகே தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டத்தையொட்டி, அரூர் கவிப்பேரரசு கம்பன் கழகம், தர்மபுரி குமாரசாமிப்பேட்டை கோயில் பிரதோஷ குழுவினர், தீர்த்தமலை வடிவாம்பிகை கோயில் குழுவினரின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும், ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. மேலும், இன்றைய சூழ்நிலையில், இறைபக்தி இருப்பது மக்களின் உள்ளத்திலா- இல்லத்திலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. கவிஞர் கீரை.பிரபாகரன் தலைமை தாங்கி பேசினார். நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கம்பன் கழக தலைவர் செவ்வேள்முருகன் செய்திருந்தார்.

Tags : Theerthamalai ,Arur ,Masi Maha ,Therottam ,Theerthamalai temple ,Aroor ,Arur Kaviperarasu Kamban Kazhagam ,Dharmapuri Kumarasamypettai temple ,Theerthamalai Vadivambigai temple ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்