மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு நடைபயிற்சி

மேட்டுப்பாளையம்,பிப்.11: மேட்டுப்பாளையம் அருகே  கோயில் யானைகளுக்கான 13வது சிறப்பு நலவாழ்வு முகாம்  துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து 26 கோயில் யானைகள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்று படுகையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்தபட்டு வருகிறது. கோயில்களில் மக்கள் வெள்ளத்தின் நடுவே  திருப்பணிகளை மட்டும் ஆண்டு தோறும் மேற்கொள்ளும் யானைகளுக்கு அவற்றின் மன அழுத்தத்தையும் சோர்வை போக்கி யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் இந்த யானை முகாம் துவங்கபட்டது. யானைகளின் உடல் மருத்துவ பரிசோதனை செய்யபட்டு யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை,ஊட்ட சத்துடன் கூடிய சத்தான உணவு, நடைபயிற்சி என யானைகளின் உடல் நலனை பாதுகாக்க அனைத்து ஏற்பாடுகளும் முகாமில் செய்யபட்டுள்ளது.  முகாமில் பங்கேற்ற யானைகளுக்கு அவற்றின் உடல் எடை சரிபார்க்கப்பட்டு உடல் எடையை குறைக்க தினசரி காலை,மாலை  இரு வேளைகளில் நடைபயிற்சி  போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது.முகாமில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் திருகுமாரன் தலைமையிலான மருத்துவக்குழு 24 மணி நேரமும் யானைகளை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் அழகிய நம்பிராயர் கோயில் யானை குறுங்குடிவள்ளி(26) பின் காலில் ஏற்பட்டுள்ள சிறிய காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து முகாமில் உள்ள அனைத்து யானைகளையும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories:

>