×

தை அமாவாசையையொட்டி சம்பங்கி, கோழிக்கொண்டை பூ விலை உயர்வு

சத்தியமங்கலம், பிப். 11:   தை அமாவாசையையொட்டி சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று சம்பங்கி மற்றும் கோழி கொண்டை பூக்கள் விலை அதிரித்து காணப்பட்டது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பவானிசாகர், சிக்கரசம்பாளையம், புஞ்சை புளியம்பட்டி, அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மல்லிகை, முல்லை, செண்டுமல்லி, கோழிக்கொண்டை, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு விதமான மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில், விலை நிர்ணயம் செய்து, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில், இன்று தை அமாவாசையை என்பதால், கோயில்களில் மாலை மற்றும் பூஜைக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், நேற்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூஜைக்கு தேவையான பூக்களின் விலை அதிகரித்தது.  கடந்த சில நாட்களாக சம்பங்கி மற்றும் கோழி கொண்டை பூக்கள் அதிகபட்சமாக கிலோ ரூ.50 வரை மட்டும் விற்ற நிலையில், நேற்று விலை உயர்ந்து கோழிக்கொண்டை ரூ.135க்கும், சம்பங்கி ரூ.140க்கும் விற்பனையானது. பூஜைக்கு தேவையான பூக்களின் விலை அதிகரித்ததால், சம்பங்கி மற்றும் கோழிக்கொண்டை பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags : New Moon ,Thai ,
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...