×

புகையிலை பொருள் பதுக்கல்: அண்ணன், தம்பி சிக்கினர்

 

ராஜபாளையம், மார்ச் 13: ராஜபாளையம் அருகே புகையிலை பொருட்களை பதுக்கிய சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 60 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ரெங்கநாயக்கன்பட்டியில், பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கீழராஜகுலராமன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த கடையில் சோதனையிட்டனர். அப்போது சுமார் 60 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விஜயராமர் மகன்கள் பிரகாஷ் (30) சண்முகபெருமாள்(29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Rajapalayam ,Renganayakkanpatti ,Virudhunagar district ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...