மூணாறு, மார்ச் 13:பள்ளிவாசல் நீர் மின் திட்டத்தின் ஒரு பாகமான மாட்டுப்பெட்டி பவர்ஹவுஸில் மின் உற்பத்திக்குப் பிறகு வெளியிடப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி 60 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் நோக்கத்துடன் பள்ளிவாசல் மின் விரிவாக்கத் திட்டத்தை கடந்த 2001ம் ஆண்டு அரசு அறிவித்தது.
மேலும், இத்திட்டத்திற்கு ரூ.310 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் பாகமாக பள்ளிவாசல் நீர்மின் நிலையத்தில் 375 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் பல்வேறு காரணங்களால், பல ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்க பணிகள் 2007ல் துவங்கியது. ஹெட் ஒர்க்ஸ் அணையில் இருந்து மூன்றரை கி.மீ., தூரம் சுரங்கம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இந்த நிலையில் தற்போது பள்ளிவாசல் மின் விரிவாக்கத் திட்டப் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
