×

பெரியகோட்டை கிராமத்தில் புதிய பகுதிநேர ரேசன் கடை

 

கந்தர்வகோட்டை, மார்ச் 14: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் 350 குடும்பங்கள் வசித்து வரும் மக்கள் சொக்கம்பட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு உட்பட்ட நியாயவிலை கடையில் அத்தியாவசியப்பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் பெரியகோட்டை மக்கள் மோகனூர் சென்று வர மக்கள் சிரமம் அடைவதாகவும், எனவே பகுதிநேர அங்காடி திறக்க வேண்டும் என அமைச்சர் மெய்யநாதனிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று 12ம் தேதி பெரியகோட்டை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, தெற்கு ஒன்றிய செயலாளர் மங்களாகோவில் பரமசிவம் முன்னிலையில் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அங்காடியை திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்களை வழங்கினார்.

Tags : Periakottai ,Kandarvakottai ,Periakottai panchayat ,Pudukkottai district ,Sokkampatti Agricultural Cooperative Credit Society ,Periakottai… ,
× RELATED பூ மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்