×

நெல்லை மாவட்டத்தில் நாளை பொதுவிநியோக திட்ட குறைதீர்ப்பு முகாம்

நெல்லை, மார்ச் 13: பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு ஒவ்வொரு மாதமும் நெல்லை மாவட்டத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி மார்ச் மாதம் 2வது சனிக்கிழமை நாளை 14ம் தேதி நடைபெறும் இக்குறைதீர் முகாமில் பொதுவிநியோகத்திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம். மேலும் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், சேர்த்தல், செல்போன் எண் மாற்றம் கோரி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

Tags : Distribution ,Nellai District ,Nellai ,Scheme Grievance Redressal ,Taluka ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...