கொல்கத்தா: சென்ட்ரல் எக்சைஸ்-சிஜிஎஸ்டி ஐடிஎப் டென்னிஸ் போட்டிகள் கொல்கத்தாவில் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த போட்டியில், தமிழக வீரர் அபினன் சஞ்சீவ், டெல்லி வீரர் ரோஹன் மெஹ்ரா மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய அபினன், 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து, காலிறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
* செமிபைனலில் யூகி பாம்ப்ரி
இண்டியன்வெல்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று, இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, சுவீடன் வீரர் ஆந்த்ரே கொரான்சன் இணை, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர், இத்தாலியின் ஆண்ட்ரியா வவாஸோரி இணையுடன் மோதினர். துவக்கம் முதல் அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய பாம்ப்ரி, கொரான்சன் இணை, 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடி அரையிறுதிக்கு முன்னேறியது.
