×

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: வேட்டையாடிய பேயர்ன் மியுனிச்; 6 கோல் வாங்கி அட்லாண்டா படுதோல்வி

பெர்காமோ: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நேற்று, பேயர்ன் மியுனிச் அணி 6 கோல் போட்டு அபார வெற்றி பெற்றது. இத்தாலியில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த முன்னணி கால்பந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. பெர்காமோ நகரில் நேற்று நடந்த ஒரு போட்டியில் பேயர்ன் மியுனிச், அட்லாண்டா அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் பேயர்ன் அணி வீரர்கள் சூறாவளியாய் சுழன்றாடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பேயர்ன் அணியின் ஜோஸிப் ஸ்டான்சிக், 12வது நிமிடத்தில் சிறப்பாக பந்தை கடத்திச் சென்று அணியின் முதல் கோல் போட்டார்.

அந்த அணியின் மைக்கேல் ஒலிஸே, 22 மற்றும் 64வது நிமிடங்களில் மேலும் 2 கோல்கள் போட்டு ரசிகர்களின் கரவொலி பெற்றார். பேயர்ன் அணியின் செர்கி நாப்ரி 25வது நிமிடத்திலும், நிகோலஸ் ஜாக்ஸன் 52வது நிமிடத்திலும், ஜமால் முஸியாலா 67வது நிமிடத்திலும் சீரான இடைவெளியில் கோல்கள் போட்டு அணியை அசைக்க முடியாத சக்தியாக உயர்த்தினர். அவர்களை தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த அட்லாண்டா அணிக்கு ஆறுதல் தரும் வகையில் ஸ்டாப்பேஜ் நேரத்தில், 90+3வது நிமிடத்தில் அட்லாண்டாவின் மரியோ பஸாலிக் ஒரு கோல் போட்டார். அதன் பின் கோல் விழாததால், 6-1 என்ற கோல் கணக்கில் பேயர்ன் அணி மெகா வெற்றியை பதிவு செய்தது.

Tags : Champions League Football ,Bayern Munich ,Atalanta ,Bergamo ,Champions League ,Italy ,Bergamo… ,
× RELATED 2026ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.!