×

திருச்சியில் இருந்து புராஜக்ட் செய்ய அடையார் சிஎல்ஆர்ஐ நிறுவனம் வந்த போது சென்னையில் பி.டெக் மாணவியை காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் தொந்தரவு

சென்னை: திருச்சியில் இருந்து புராஜக்ட் செய்ய அடையார் சிஎல்ஆர்ஐ நிறுவனத்திற்கு வந்த போது, தனது புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டி தன்னை காரில் கடத்தி மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மகளிர் காவல் நிலையத்தில் மாணவி பரபரப்பு புகார் ஒன்று அளித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ராணி(22)(பெயர்மாற்றப்பட்டுள்ளது). இவர் திருச்சியில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். புராஜக்ட் ஒர்க் செய்ய சென்னை அடையாரில் உள்ள சிஎல்ஆர்ஐ நிறுவனத்திற்கு கடந்த பிப்ரவரி 14ம் ேததி திருச்சியில் இருந்து சென்னை வந்தார். பிறகு அடையாரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி அடையார் சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 16ம் ேததி முதல் பிராஜக்ட் பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

இதற்கிடையே மகளிர் விடுதியில் தங்கி இருந்த போது, அவரது செல்போன் திடீரென ேஹக் ெசய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் இவரது புகைப்படங்களை மார்பிங் செய்து, நிர்வாணமாகவும், ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பது போன்று மாணவி ராணியின் வாட்ஸ் அப்க்கு மர்ம நபர் ஒருவர் அவரது புகைப்படங்களை கடந்த 9ம் தேதி அனுப்பியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி ராணி திகைத்தார். அதேநேரம் அந்த மர்ம நபர் சிஎல்ஆர்ஐ நிறுவனத்தின் 2வது கேட் அருகே ஒரு கார் நிற்கும். அங்கு வந்து எதுவும் பேசாமல் காரில் ஏறினால், புகைப்படங்களை அழித்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன்படி சிஎல்ஆர்ஐ நிறுவனத்தின் 2வது கேட் அருகே கார் ஒன்று வந்தது. அதில் பின் இருக்கையில் 2 வாலிபர்கள் இருந்தனர். மாணவியை கையை காட்டி காரில் ஏறும்படி கூறியுள்ளனர். ஆனால் மாணவி காரில் ஏற மறுத்து அங்கிருந்து பயத்தில் தப்பி செல்ல முயன்றார். ஆனால் மர்ம நபர்கள் 2 பேரும் மாணவியை கையை பிடித்து இழுத்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர். மாணவி உதவி கேட்டு கத்திய போது, காரில் இருந்த மற்றொருவர் மயக்க ஸ்பிரே அடித்துள்ளார். உடனே மாணவி மயங்கிவிட்டர். பின்னர் அன்று இரவு மாணவியை மர்ம நபர்கள் அடையாரில் உள்ள அவர் தங்கியுள்ள பெண்கள் விடுதியின் அருகே காரில் இருந்து இறக்கிவிட்டு சென்றுள்ளனர். பெண் தோழி ஒருவர் உதவியுடன் அடையாரில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதித்த போது, மாணவி பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதே நேரம் மீண்டும் அந்த மாணவிக்கு காரில் கடத்திய மர்ம நபர் வெறு ஒரு செல்போன் எண்ணில் இருந்து அழைத்து, மருத்துவமனை எதிரே நான் வந்து இருக்கிறேன். உனது புகைப்படங்களை வந்து வாங்கி செல் என்று கூறியுள்ளார். அதை கேட்டு மீண்டும் மாணவி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து மர்ம நபர் கூறியபடி காரில் ஏறியுள்ளார். அப்போதும், அந்த மர்ம நபர்கள் 2 பேர் மீண்டும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து… இதுகுறித்து வெளியே சொன்னாலோ அல்லது புகார் அளித்தாலோ எனது ஆபாச புகைப்படங்கள் அனைத்து, இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்து உன் வாழ்க்கையை சீரழித்துவிடுவோம். ஒழுங்க இத்துடன் பிராஜக்ட் ஒர்க் முடித்துவிட்டு ஊர் பாக்க போய் சேரு…. உன்னை இனி நாங்கள் தொந்தரவு செய்ய மாட்டோம் என்று மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.

இதை குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் உள்ள கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று இரவு கைப்பட எழுதிய புகார் மனுவை மாணவி ராணி அளித்தார். அந்த புகாரின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி, அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாக புகைப்படங்கள் அனுப்பிய 2 எண்களை கைப்பற்றி, அது யாருடைய எண் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் மாணவி அளித்த புகார் தொடர்பாக, போலீஸ் கமிஷனர் அருண் கவனத்திற்கு மகளிர் போலீசார் உடனே கொண்டு சென்றனர். அதை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கமிஷனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனர் வனிதா தலைமையில் தனிப்பைட அமைத்து குற்றவாளிகள் கைது செய்ய உத்தரவுட்டார்.

அதன்படி துணை கமிஷனர் வனிதா தலைமையிலான தனிப்படையினர் மாணவி புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து, பாதிக்கப்பட்ட மாணவியிடம், மர்ம நபர்கள் தொடர்பான அங்க அடையாளங்கள் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது செல்போனையும் பெற்று மார்பிங் புகைப்படங்களையும் ஆய்வு செய்தனர். மேலும், மிரட்டல் விடுத்த மர்ம நபர் பேசிய செல்போன் எண், புகைப்படம் அனுப்பிய 2 எண்களை சைபர் க்ரைம் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : CLRI ,Trichy ,B. Tech ,Chennai ,
× RELATED 3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை...