திருச்சி, மார்ச் 12: திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் நடைபெற்ற தேஜ பொதுக் கூட்டத்திற்கு வந்த தொண்டர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சோதனை செய்தபோது அவர்களிடமிருந்து புகையிலைபொருட்கள், சிகிரெட்டுகள், மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆங்காங்கே தொண்டர்கள் பலர் மதுபோதையில் தேஜ பொதுகூட்டத்தில் ஆங்காங்கே விழுந்திருந்தனர். பஞ்சப்பூர் அருகே தொண்டர்கள் பலர் கூட்டம் முடிந்ததும் ஒரேநேரத்தில் வாகனங்களை சென்றதால் சாலையில் வந்த ஆம்புலன்ஸ் வழியின்றி வெகு நேரம் சிக்கி தவித்தது. கூட்டம் முடிந்து வந்த தொண்டர்கள் பொதுக்கூட்டத்திற்கு வரவேற்புக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகளில் ஏறி ஆபத்தான நிலையில் கட்சி கொடிகளை ஏந்தியவாறு நின்றனர்.
