விக்கிரவாண்டி, மார்ச் 12: விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் சேர்ந்தவர் முரளி (39), கூலி தொழிலாளி. இவர் கடந்த 5 வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டிலிருந்தபோது மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இதுபற்றி விக்கிரவாண்டி போலீசில் முரளியின் மனைவி அம்மு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
