×

இணையம் வழியாக பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

விராலிமலை, மார்ச் 11: பதிவுத்துறை சேவைகளை இணையம் வழியாக எவ்வாறு பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி விராலிமலை பத்திர பதிவு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது இதில்,பொதுமக்கள், வங்கி அலுவலர்கள், வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் பதிவுத்துறை சேவைகளை இடைத்தரகர்கள் இன்றி, (tnreginet.gov.in < http://tnreginet.gov.in/ >) இணையதளம் மற்றும் செயலி மூலம் பொதுமக்கள் நேரடியாகப் பெறுவதை ஊக்குவிக்க, ஸ்டார் 3.0 என்ற காகிதமில்லா ஆவணப்பதிவு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் மண்டல வாரியாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பதிவுத்துறை அலுவலகத்தில் இணையம் வழி சேவை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.திருச்சி மண்டல பதிவுத்துறை துணை தலைவர் சத்யபிரியா தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட பதிவு தலைவர் சுசீலா (தணிக்கை), புதுக்கோட்டை சார்-பதிவாளர் அறிவழகன் (நிர்வாகம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்

Tags : Viralimalai ,Viralimalai Deeds Registry Office ,Tamil Nadu ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...