×

அரியலூர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

 

அரியலூர், மார்ச்11: அரியலூர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 2 மணி நேரம் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நேற்று காலை 9.31 மணிக்கு வந்த நீதிமன்ற ‘இ மெயிலில்’, நீதிமன்ற நீதிபதி அறைகளில் 5சயனைடு வாயு நிரப்பப்பட்ட விஷகுண்டுகள் வெடிக்க உள்ளன. பிற்பகல் 1.10 மணிக்குள் ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றும்படி என குறிப்பிடப்பட்டிருந்தது. அரியலூர் எஸ்பி விஷ்வேஷ் பா சாஸ்திரி உத்தரவின்பேரில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ‘மோனா’ என்ற மோப்ப நாயுடன் நீதிபதி அறைகள், நீதிமன்ற வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடந்த இந்த சோதனையில் எந்தவித வெடிகுண்டும் சிக்க வில்லை.

Tags : Ariyalur court ,Ariyalur ,Ariyalur Combined Court ,
× RELATED அரியலூர் நகராட்சியில் ரூ.18.20 கோடியில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகள்