காரியாபட்டி, மார்ச் 11: காரியாபட்டி அருகே ஆற்றின் கரையோரம் குவித்து வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
காரியாபட்டி அருகே ஆத்திகுளம் பேருந்து நிறுத்தம் பின்புறம் உள்ள தெற்காற்றின் கரையில் மர்மநபர்கள் மணலை திருடி குவித்து வைத்திருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காரியாபட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, 2 இடங்களில் 10 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணலை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அதிகாரிகள், மணலை திருடி குவித்து வைத்த மர்மநபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
