×

முத்துமாரியம்மன் கோயிலில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

காரைக்குடி, மார்ச் 11: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி,பங்குனி பெருவிழா நேற்று கொடியேற்றதுடன் துவங்கிய நிலையில், வரும் 18ம் தேதி நடக்கவுள்ள பால்குடத்தில் பல லட்சம் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி,பங்குனி பெரு விழா ஒவ்வொரு ஆண்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவில் மாசி,பங்குனிப் பெருவிழா 45 நாட்கள் நடக்கும். இந்த ஆண்டுக்கான மாசி,பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று காலை 4.30 மணிக்கு கணபதி பூஜையும், காலை 6.15 முதல் 6.50க்குள் கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நடந்தது. இதனை தொடர்ந்து பல லட்சம் பக்தர்கள் காப்பு கட்டி தங்கள் விரதத்தை துவங்கினர்.

Tags : Muthumariamman ,Karaikudi ,Karaikudi Meenakshipuram Muthumariamman ,temple ,Masi, Panguni festival ,Paalkudam ,Karaikudi Meenakshipuram Muthumariamman temple Masi, Panguni festival… ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...