×

திண்டுக்கல்லில் மத்திய பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தல்

 

திண்டுக்கல், மார்ச் 11: திண்டுக்கல்லில் தேர்தல் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் மத்திய பாதுகாப்பு படையினருக்கு திண்டுக்கல் டிஐஜி சசி மோகன் அறிவுரை வழங்கினார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு படை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் மற்றும் திண்டுக்கல் எஸ்பி பிரதீப், ஆகியோர் தலைமையில் தேர்தல் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் பணிகள் குறித்தும், பதட்டமான வாக்கு சாவடிகளில் எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் பாதுகாப்பு படையினருக்கு அறிவுரை வழங்கினர்

Tags : Central Security Forces ,Dindigul. ,Dindigul ,DIG ,Sasi Mohan ,Tamil Nadu.… ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...