×

பெண்களிடம் 6 பவுன் கொள்ளை

 

பழநி, மார்ச் 11: பழநி அருகே ஆயக்குடியில் வீட்டின் தனியாக இருந்த பெண்களிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழநி அருகே ஆயக்குடி, ஓபுளாபுரத்தைச் சேர்ந்தவர் சித்ரா (35). இவருடன் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பிரியா (30), திருச்சியைச் சேர்ந்த இலக்கியா (35) ஆகியோர் தங்கி உள்ளனர். நேற்று முன்தினம் மூவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது முகமூடி அணிந்து வந்த 6 பேர் சித்ரா உள்ளிட்டோர் அணிந்திருந்த 6 பவுன் நகைகளையும், பீரோவில் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சித்ரா நேற்று ஆயக்குடி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஆயக்குடி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Palani ,Ayakudi ,Chitra ,Opulapuram, Ayakudi ,Priya ,Ottanchatram… ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...