×

சிறுமுகை அம்பாள் பப்ளிக் பள்ளியில் மகளிர் தின கொண்டாட்டம்

 

மேட்டுப்பாளையம், மார்ச் 11: சிறுமுகை  அம்பாள் பப்ளிக் பள்ளியில் நேற்று முன்தினம் சர்வதேச மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி செயலாளர் கீதா பழனிசாமி, இயக்குநர் செல்வி பிரதிக்ஷா ஆகியோர் தலைமை வகித்தனர்.
பள்ளி முதல்வர் ஏஞ்சலின் ஜே.வில்லியம்ஸ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சாதனை பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் பள்ளியின் பெற்றோர்களில் சாதனை பெண்மணிகளான சித்ரா, கவிதா, விஜிதா, கார்த்திகா ஆகியோரை தேர்ந்தெடுத்து சிறப்பு விருந்தினராக கௌரவிக்கப்பட்டது. விழாவில் பெண்களின் முன்னேற்றத்தை உணர்த்தும் வகையில் நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags : Women's Day ,Sirumugai ,Ambal Public School ,Mettupalayam ,International Women's Day ,Sirumugai  Ambal Public School ,School Secretary ,Geetha Palaniswami ,Selvi Pratiksha ,
× RELATED பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடினம்