×

கோவை ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

கோவை, மார்ச் 9: கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் உபேந்திரகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நேற்று சுமார் 8 மணி அளவில் தன்பாத் ஆலப்புழா ரயில் கோவை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் வகையில் வாலிபர் ஒருவர் சுற்றிக்கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 2 லட்ச ரூபாய் மதிப்பிலான 4 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மதன்மாலிக் (28) என தெரியவந்தது. போலீசார் அவரை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

 

Tags : Coimbatore railway station ,Coimbatore ,Railway Safety Inspector ,Upendra Kumar ,Dhanbad ,Alappuzha ,
× RELATED பிளஸ்-2 வேதியியல் தேர்வு கடினம்