×

பெரம்பலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு 3வது நாளாக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.11: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் கைதை கண்டித்து, பெரம்பலூரில் 3வது நாளாக ஜாக்டோ-ஜியோ கூட்ட மைப்பின் சார்பாகக் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய் வூதியத் திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராடி வரும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 20க்கும் மேற்பட்டோரை தமிழக அரசு கைதுசெய்த நடவடிக்கையை கண்டித்து நேற்று மாலை கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் பெரம்பலூ ர் மா வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமர், கலியமூர்த்தி, இளங்கோவன் ஆகியோர் கூட்டாகத் தலைமை வசித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் குமரி அனந்தன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராமலிங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மரியதாஸ், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிவேல் ராஜன், பேரசிரியர் செல்வக்குமார், எம்ஆர்பி செவிலியர் சங்க மாவட்ட தலைவி சகுந்தலா, ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் சின்னசாமி, ஸ்டாலின்,காமராஜ், செந்தில்கு மார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

Tags : alliance protests ,Jakto-Jio ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி