×

சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை; அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்: சென்னை மாநகராட்சி

சென்னை: நாடு முழுவதும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் அம்மா உணவகங்களில் தொடர்ந்து உணவளிக்கும் வகையில் அனைத்துப் பணிகளும் நடக்கின்றன. போதுமான சிலிண்டர்கள் இருப்பு உள்ளதால், பிரச்னை இல்லை என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் -அமெரிக்கா போர் காரணமாக இந்தியாவில் காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள் உணவு வகைகளை குறைத்துள்ளன. இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர்கள் இருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஓட்டல்கள் உரிமையாளர்களுடன் தமிழக அரசு ஆலோசனை செய்யவுள்ளது. இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதல்வர்களும் பிரதமருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கின்றனர். தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த தட்டுப்பாடு தொடர்பாக பிரதமரும் அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் அதிகம் சாப்பிடச் செல்லும் அம்மா உணவகங்களிலும் சிலிண்டர்கள் தட்டுப்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதனை அடுத்து, சென்னையில் ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் அம்மா உணவகங்களில் தொடர்ந்து உணவளிக்கும் வகையில் அனைத்துப் பணிகளும் நடக்கின்றன. போதுமான சிலிண்டர்கள் இருப்பு உள்ளதால், பிரச்னை இல்லை. மொத்தமுள்ள 383 அம்மா உணவகங்களுக்கு மாதந்தோறும் 2,885 சிலிண்டர்கள் தேவை என்ற நிலையில், தற்போது 960 சிலிண்டர்கள் இருப்பில் உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags : CHENNAI ,Chennai Municipality ,Iran—Israel—United ,States ,
× RELATED தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து...