×

ஓமலூர் ஒன்றியத்தில் சாலை அமைக்க பூமிபூஜை ராஜேந்திரன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ஓமலூர், பிப்.11: ஓமலூர்  ஒன்றியத்தில் உள்ள கோட்டகவுண்டம்பட்டி ஊராட்சி ஆணைகவுண்டன்பட்டி  மக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட  கவுன்சிலர் அழகிரி, தனது வார்டு வளர்ச்சி நிதியிலிருந்து ஆழ்துளை கிணறு,  பைப்லைன் மற்றும் சாலை அமைக்க ₹10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.  இதேபோல், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கான்கிரீட் சாலை மற்றும்  சாக்கடை அமைக்க ₹10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள்  துவக்க விழா நேற்று நடந்தது.

இதில், மத்திய மாவட்ட திமுக செயலாளர்  ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ரமேஷ், திருநாவுக்கரசு, சுப்ரமணி, விஜயகுமார், ரவிச்சந்திரன், தேன்மொழி தனசேகரன், சுமதி மாணிக்கவாசகம், லலிதா அருள்பாலாஜி, வசந்தா குமார்,  சுப்பிரமணி, பாலமுருகன், ராஜ்குமார் ராசுகுட்டி, ராஜா, சேகர், தமிழ்மணி, ஹரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Rajendran MLA ,road ,Omalur Union ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி