×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 360 பேர் ஆப்சென்ட்

 

ஈரோடு,மார்ச் 10: வேதியியல், கணக்கு பதிவியல், புவியியலுக்கான பிளஸ்- 2 பொது தேர்வில் 360 பேர் ஆப்சென்ட் ஆகினர். ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொது தேர்வு நடந்து வருகிறது.நேற்று வேதியியல், கணக்குபதிவியல் மற்றும் புவியியல் தேர்வு நடந்தது.வேதியியல் பாட தேர்வுக்கு 14,397 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 14,071 பேர் தேர்வு எழுதினர்.76 பேர் தேர்வு எழுதவில்லை.
தனி தேர்வர்கள் 2 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.ஒருவர் மட்டும் தேர்வு எழுதினார்.கணக்கு பதிவியல் தேர்வுக்கு 7,209 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர் 6,997 பேர் எழுதினர். 212 பேர் ஆப்சென்ட் ஆகினர். தனி தேர்வர்களாக 464 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இதில் 400 பேர் தேர்வு எழுதினர். புவியியல் தேர்வுக்கு 94 மாணவ,மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். 87 பேர் தேர்வு எழுதினர். 7 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

Tags : Erode ,Plus- ,general election ,Erode District ,
× RELATED ஈரோடு மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிர் தின விழா